Karuvi -Jaffna

karuvi.org

கருவி மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2023

கருவி மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2023

கருவி நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் தினப்போட்டிகள் -2023 ற்கான விபரங்களை உள்ளடக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகள நிலையம் டிசெம்பர்-03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமுக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கவிதை, கட்டுரை, ஓவியம், சிறுகதைப் போட்டிகளை வருடாந்தம் நடார்த்தி வருகின்றது.

இப்போட்டிக்கான ஆக்கங்கள் 2023 நவம்பர் 18ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம், இல-290, பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். ஒருவர் ஒரு ஆக்கத்தினை மட்டுமே அனுப்பி வைக்க முடியும்.

இப்போட்டிக்கான ஆக்கங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தினங்களில் ஏதேனும் ஒன்றை தலைப்பாகவோ அல்லது மையக் கருத்தாகவோ கொண்டிருத்தல் வெண்டும்.
• சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசெம்பர்-3
• சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் ஒக்டோபர்-15
• உலக ஓட்டிச தினம் ஏப்ரல்-2
• உலக டவுன் சிண்ட்ரோம் தினம் மார்ச்-21
• உலக செவிப்புலனற்றோர் தினம் செப்டெம்பர் இறுதி ஞாயிறு
• உலக உளவள தினம் ஒக்டோபர் -10

கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் பாடசாலை மாணவர்களாயின் 300-350 சொற்களைக் கொண்டதாகவும், பொதுமக்களாயின் 400- 450 சொற்களைக் கொண்ட-தாகவும் ஆக்கத்தினை அமைத்தல் வேண்டும். கவிதைப் போட்டியில் பங்குபற்றும் பாடசாலை மாணவர்கள் 30 வரிகளைக் கொண்டதாகவும், பொதுமக்களாயின் 50 வரிகளைக் கொண்டதாகவும் கவிதையினை அமைத்தல் வேண்டும். ஓவியப் போட்டியில் பங்குபற்றுபவர்களாயின் யு4 அல்லது யு3 தாளில் உங்கள் ஓவயங்களினை வரைந்து அனுப்புதல் வேண்டும்.

ஆக்கத்துடன் பெயர், முகவரி, பிறந்த ஆண்டு மாதம் திகதி, தொலைபேசி இலக்கம் அடக்கிய சுயவிபரக்கோவையினையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையின் பெயர், தரம் என்பனவற்றையும் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். ஆக்கங்கள் இப்போட்டிக்காக எழுதப்பட்ட ஃ வரையப்பட்ட புதிய ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.

வெற்றியாளர்களுக்கான பரிசில், சான்றிதழ், பதக்கம் என்பன கருவியின் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும்.

தரமான ஆக்கங்கள் வலுச்சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

மேலதீக தகவல்களுக்கு: 0212054224, 076 638 5563 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

கருவியின் தசவிழா அழைப்பிதழ்
Previous Post கருவியின் தசவிழா அழைப்பிதழ்
மாதம் ஒரு பொதி
Next Post மாதம் ஒரு பொதி