Karuvi -Jaffna

karuvi.org

மாற்றுத்திறனாளிகள் தின போட்டி முடிவுகள்-2022

மாற்றுத்திறனாளிகள் தின போட்டி முடிவுகள்-2022

உலகளாவிய ரீதியில் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தையொட்டி கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடம் தோறும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கவிதை, கட்டுரை, சிறுகதை, சித்திரப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகளினை கருவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினை செல்வி நிசோதா கருணாகரன் (யா/வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை). இரண்டாம் இடத்தினை செல்வி சோதிநாதன் டர்மினி (யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி). மூன்றாம் இடத்தினை செல்வி கம்சிக்கா யோகரட்ணம் (வவு/றம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்). ஆகியோரும். கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினை செல்வன். அன்ரன் அனஸ் ரீன் டேனுஜன் (யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி). இரண்டாம் இடத்தினை செல்வி நிசோதா கருணாகரன் (யா/வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை). மூன்றாம் இடத்தினை செல்வி ஜெயசீலன் தர்மிக்கா (யா/உடுவில் மகளீர் கல்லூரி). ஆகியோரும். சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தினை செல்வன். இராசேந்திரம் துசிகரன் (யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி), இரண்டாம் இடத்தினை செல்வி அபிஸ்ணா இரமணாகரன் (யா/வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை), மூன்றாம் இடத்தினை செல்வி ஜெயசீலன் தர்மிக்கா (யா/உடுவில் மகளீர் கல்லூரி). ஆகியோரும் பெற்றுள்ளனர்.

பொது மக்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினை நடராசா கண்ணதாஸ் (அல்லாரை வடக்கு, கொடிகாமம்), இரண்டாம் இடத்தினை கி.குலசேகரன் (119/4 ஆதர் சிறிசேன மாவத்தை, அப்புத்தளை), மூன்றாம் இடத்தினை அமித்தா ஜெயசீலன் (ஆர்க் வீதி, உடுவில், சுன்னாகம்.), ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினை யோகராசா மோகதாசன் (விவசாய வீதி, கொண்டயன் கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு), இரண்டாம் இடத்தினை அஜிந்தா கண்ணதாஸ் (அல்லாரை வடக்கு, கொடிகாமம்), மூன்றாம் இடத்தினை அமித்தா ஜெயசீலன் (ஆர்க் வீதி, உடுவில், சுன்னாகம்). ஆகியோரும், சிறுகதைப் போட்டியில் முதலாம் இடத்தினை நடராசா கண்ணதாஸ் (அல்லாரை வடக்கு கொடிகாமம்), இரண்டாம் இடத்தினை பாலசுந்தரம் இரமணாகரன் (சன்நிதி வீதி, இடைக்காடு, அச்சுவேலி), ஆகியோரும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2022. டிசெம்பர் 3 அன்று தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெறும் கருவியின் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும், இது தொடர்பான மேலதிக விபரங்களை 021 205 4224, 076 638 5563 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கருவி நிர்வாகத்தினர் அறிவித்துள்னர்.

கருவி புதியதோர் மாற்றத்தை நோக்கி
Previous Post கருவி புதியதோர் மாற்றத்தை நோக்கி
கருவியின் மாற்றுத்தினாளிகள் தினம் 2022
Next Post கருவியின் மாற்றுத்தினாளிகள் தினம் 2022