Karuvi -Jaffna

karuvi.org

வெள்ளைப்பிரம்பு தினம்-2018

வெள்ளைப்பிரம்பு தினம்-2018


ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம். இத்தினத்தையொட்டி கருவி நிறுவனம் 14.10.2018 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அலுவலகத்தில் அனுட்டித்திருந்து. கருவியின் தலைவர் திரு. க.தர்மசேகரம் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தீவக லயன்ஸ்கழகம் அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் தீவக லயனஸ்; கழகத்தின் பொருளாளரும், ஓய்வு பெற்ற கல்வித்திணைக்களப் பொறியியலாளருமான திரு பு.சிவபாலன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தீவக லயன்ஸ் கழக உறுப்பினர்கள், கருவியின் நிர்வாக சபையினர், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தீவ லயன்ஸ் கழகத்தினரால் வெள்ளைப் பிரம்புகள், மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் ஆகியன கருவி அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்தி சுயமாக நடமாடும் பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. கருவி நிறுவனத்தின் செயலாளர் திரு.து.யசிந்தன் அவர்களும் நிர்வாகசபை அங்கத்தவர் திரு.இ.கந்தராசா அவர்களும் இணைந்து இப்பயிற்சி நெறியினை வழங்கியிருந்தனர்.

ஆண்டுவிழா-2019
Previous Post ஆண்டுவிழா-2019
வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு-2019
Next Post வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு-2019