ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும். இதனையொட்டி தீவக லயன்ஸ்கழகம், கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தோடு இணைந்து 20.10.2019 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அனுஸ்டித்திருந்தது.
தீவக லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த யு.சபாநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், வெள்ளைப்பிரம்பு தொடர்பான விழிப்பூட்டல் செயற்பாடுகள் இடம் பெற்றதுடன், கருவியின் பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள் மற்றும் அன்பளிப்புக்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கருவி நிர்வாக சபையினர், பார்வையற்ற அங்கத்தவர்கள், தீவக லயன்ஸ் கழகத்தினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு-2019


Previous Post
வெள்ளைப்பிரம்பு தினம்-2018

Next Post
நூல் அறிமுக விழா-2018