Karuvi -Jaffna

karuvi.org

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடார்த்தும் போட்டிகள்-2020

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடார்த்தும் போட்டிகள்-2020

டிசெம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இதனையொட்டி கருவிமாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமுக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கவிதை, கட்டுரை, ஓவியம், சிறுகதைப் போட்டிகளை வருடாந்தம் நடார்த்தி வருகின்றது. இந்த வகையில் இவ்வாண்டு போட்டிக்கான ஆக்கங்களை எழுதி அனுப்ப வேண்டிய இறுதிநாள் நவம்பர்25, 2020 ஆகும்.

இவ்வாண்டு போட்டியாளர்களுக்கான தலைப்பாக “நம் வாழ்க்கை நம் கையில்” என்பதாகும். ஆக்கங்கள் மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தியதாகவோ அல்லது அவர்களைத் தொடர்புபடுத்தியதாகவோ இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரு ஆக்கத்தினை மட்டுமே அனுப்பி வைக்க முடியும்.

கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் பாடசாலை மாணவர்களாயின் 300-350 சொற்களைக் கொண்டதாகவும், பொதுமக்களாயின் 400- 450 சொற்களைக் கொண்ட-தாகவும் ஆக்கத்தினை அமைத்தல் வேண்டும். கவிதைப் போட்டியில் பங்குபற்றுபவர்களாயின் குறைந்த பட்சம் பாடசாலை மாணவர்களாயின் 30 வரிகளைக் கொண்டதாகவும், பொதுமக்களாயின் 50 வரிகளைக் கொண்டதாகவும் கவிதைகளினை அமைத்தல் வேண்டும். ஓவியப் போட்டியில் பங்குபற்றுபவர்களாயின் A4 அல்லது A3 தாளில் உங்கள் ஓவியங்களினை வரைந்து அனுப்பலாம்.

ஆக்கத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையம், இல-290, பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம். ஆக்கங்களினை karuvi.org@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்ப முடியும்.

ஆக்கங்களுடன் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அடக்கிய சுயவிபரக்கோவையினையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வழங்கி வைக்கப்படும்.


தரமான ஆக்கங்கள் வலுச்சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
மேலதீக தகவல்களுக்கு: 0212054224

கருவியின் தடங்கள்
Previous Post கருவியின் தடங்கள்
போட்டி முடிவுகள்-2020
Next Post போட்டி முடிவுகள்-2020