Karuvi -Jaffna

karuvi.org

கருவி நிறுவன மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்- 2026

கருவி நிறுவன மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்- 2026

                                                     

டிசெம்பர் -3  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடாந்தம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கட்டுரை, சிறுகதை, கவிதை மற்றும் சித்திரப் போட்டிகளினை நடாத்தி வருகின்றது. இவ்வாண்டுப் போட்டிகளுக்கான ஆக்கங்களினை எதிர்வரும் 31.10.2026 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு

கருவி நிறுவனம்,நடுவப் பணியகம், பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கருவி நிறுவனத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்கங்கள் உங்களது சொந்தப் படைப்பாகவும் இப்போட்டிக்காக எழுதப்பட்ட / வரையப்பட்டதாகவும், ஊடகங்களில் வெளிவராததாகவும் இருத்தல் வேண்டும். ‘மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை கருப் பொருளாகக் கொண்டு’ ஆக்கங்களை அமைத்தல் வேண்டும். ஒருவர் ஒரு ஆக்கத்தினை மட்டுமே அனுப்ப முடியும். ஆக்கங்களை A4 தாளில் கணனியில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவான கையொழுத்தினால் எழுதியோ அனுப்பலாம்.

போட்டியாளர்கள் ஆக்கத்துடன் தங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிறந்த ஆண்டு மாதம் திகதி என்பனவற்றினையும், பாடசாலை மாணவர்களாயின் மேலதிகமாக பாடசாலையின் பெயர், தரம் என்பனவற்றினையும் உள்ளடக்கிய சுயவிபர படிவத்தினையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். இப்போட்டிகள் தொடர்பான விபரங்களை 0212054224> 0765515755> 0766385563 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.       

கட்டுரை அல்லது சிறுகதைப் போட்டியில் பங்குபற்றும் பாடசாலை மாணவர்களாயின் 250-300 சொற்கள் கொண்டதாகவும் பொதுமக்களாயின் 350-400 சொற்கள் கொண்டதாகவும் ஆக்கத்தினை அமைத்தல் வேண்டும். கவிதைப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்களாயின் 16 – 20 வரிகளைக் கொண்டதாகவும், பொதுமக்களாயின் 28 – 32 வரிகளைக் கொண்டதாகவும் கவிதையினை அமைத்தல் வேண்டும்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் அல்லது பொதுமக்கள் சித்திரத்தினை A4 தாளில் வரைந்து அனுப்புதல் வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் 03 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் என்பன கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினால் நடாத்தப்படும்; சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும் என கருவி நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்
Previous Post 13 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்