Karuvi -Jaffna

karuvi.org

சுயதொழில் உதவிகள் -2020

சுயதொழில் உதவிகள் -2020

எமது அங்கத்தவர்கள் சுயமாக தொழிலினை ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே மேற்கொண்டு வருகின்ற சுயதொழிலினை மேம்படுத்துவதற்குமான உதவிகளை கருவி நிறுவனம் பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்து வழங்கி வருகின்றது.

இந்த வகையில் எமது அங்கத்தவர்களில் முற்சக்கரவண்டியூடாக தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் இரு அங்கத்தவர்களுக்கு முற்சக்கரவண்டிக் கொள்வனவுக்கென ஒருதொகுதி நிதி உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா 180,000.00 ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிதியுதவியூடாக முற்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து இவ்வங்கத்தவர்கள் சுயதொழிலினை மேற்கொண்டு வருகின்றனர். கதிரை பின்னும் தொழிலினை தனது சுயதொழிலான மேற்கொண்டு வரும் அங்கத்தவர் ஒருவருக்கு டிசெம்பர் 3இல் ரூபா 10,000.00 பெறுமதியான கதிரை பின்னலுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வுதவிகளை வழங்க உதவிய அமைப்புக்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவிக்கின்றது.

வாழ்வாதார உதவிகள் -2020
Previous Post வாழ்வாதார உதவிகள் -2020
அடிப்படை வசதிப்படுத்தல்கள்-2020
Next Post அடிப்படை வசதிப்படுத்தல்கள்-2020