Karuvi -Jaffna

karuvi.org

கருவியின் பதிவுகள் 1.1.2021 தொடக்கம் 31.12.2021 வரை

கருவியின் பதிவுகள் 1.1.2021 தொடக்கம் 31.12.2021 வரை

2013ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் யுத்தம், விபத்து, நோய், பிறப்பு போன்றவற்றினால் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது.

இந்நிறுவனத்தின் செயற்றிட்டங்களாக…….

  • அங்கத்தவர்களிடம் உள்ள திறமைகளை இனங்கண்டு அதற்கான அங்கீகாரத்தினை சமூக மட்டத்தில் ஏற்படுத்தல்.
  • திறமைகளுக்கு ஏற்ப தொழில், தொழில் வாய்ப்புக்கள், தொழில் பயிற்சிகள் என்பனவற்றை வழங்குதல்.
  • நலிவுற்ற நிலையிலுள்ள அங்கத்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்வடையச் செய்தல்.
  • மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.
  • கலைத்திறமைகளை வெளிக் கொண்டு வருதல்.
  • உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்குதல்.
  • அணுகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தலும் பொருத்தமான பயிற்சிகளை வழங்கலும்.

எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுள் மேற்கண்ட சேவைகள் சிலவாகும். 2021 ஆம் ஆண்டு எமது நிறுவனம் முன்னெடுத்த செயற்பாடுகளினை இங்கு பதிவு செய்கின்றோம்.

வாழ்வாதார உதவிகள் :2021
சுயதொழில் செய்வதற்கு ஆர்வமும் திறமையும் கொண்ட அங்கத்தவர்களின் கோரிக்கை கடிதங்கள் தேவை மதீப்பீட்டுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உதவிகள் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

திகதிஅங்கத்தவர்களின் எண்ணிக்கைஉதவி
ஜன 251கால்நடைகளும் அவற்றுக்கான தீவனங்களும்
ஜன 291கால்நடைகளும் அவற்றுக்கான தீவனங்களும்
பெப் 131பெட்டிக் கடைக்கான விற்பனைப் பொருட்கள்
மார்ச் 101சுயதொழில் உதவியும் வாழ்வாதார கடனுதவியும்
மார்ச் 252கால்நடைகள்
ஏப் 271போட்டோ பிரதி இயந்திரம்
செப் 241பெட்டிக் கடைக்கான விற்பனைப் பொருட்கள்
டிசெ 101சுயதொழில் உதவி

இவ்வாண்டு 9அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் 650,000.00 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அடிப்படை வசதிப்படுத்தல்கள்-2021

அங்கத்தவர்களின் வதிவிடங்களில் உள்ள அடிப்படைத் தேவைகள், அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உதவிகளினை எமது நிறுவனம் வழங்கி வருகின்றது.

திகதஅங்கத்தவர்களின்
எண்ணிக்கை
உதவி
பெப் 131நீர் இறைக்கும் இயந்திரம் (மோட்டர்) மற்றும் அதனுடன் இணைந்த நீர்க்குழாய்கள் 
பெப் 251நீர் இறைக்கும் இயந்திரம் (மோட்டர்), நீர்த்தாங்கி மற்றும் அதனுடன் இணைந்த நீர்குழாய்கள்

இவ்வாண்டு இரு அங்கத்தவர்களுக்கான இவ் அடிப்படைவசதிப்படுத்தல் வேலைத்திட்டத்திற்காக ரூபா 60,000.00 பயன்படுத்தப்பட்டது.

அணுகு வசதிப்படுத்தல்கள்-2021

அங்கத்தவர்களுக்கு அணுகு வசதி தொடர்பான பயிற்சிகள், விளக்கங்கள் என்பன எமது நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் அவர்களின் சுயமான நடமாட்டத்தினை மேம்படுத்தும் பொருட்டு பொருத்தமான உதவு கருவிகள் வாகன வசதிப்படுத்தல்கள் என்பனவும் எமது நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றது.

திகதிஅங்கத்தவர்களின்
எண்ணிக்கை
உதவி
பெப் 81சக்கர நாற்காலி
பெப் 114(Crutch) ஊன்றுகோல்
பெப் 1110வெள்ளைப்பிரம்பு
பெப் 111சக்கர நாற்காலி
யூலை 31சக்கர நாற்காலி
அக் 1525வெள்ளைப்பிரம்புகள், மழை கவசம்
அக்2பேசும் கடிகாரம்
அக்3வெள்ளைப்பிரம்பு
செப் 2825வெள்ளைப்பிரம்பு

கல்வி உதவி-2021
கருவி நிறுவனம் மாணவ நிலையிலுள்ள அங்கத்தவர்களுக்கும் அவர்களது மாணவ நிலையிலுள்ள பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் உதவிகளினை வழங்கி வருகின்றது.

திகதிஅங்கத்தவர்களின் எண்ணிக்கைஉதவிபெறுமதி
மார் 275கற்றல் உபகரணங்கள்7500.00
டிசெ 108கற்றல் உபகரணங்கள்16,000.00
மாதாந்தம்10கல்வி நிதி120,000.00

மாதம் ஒரு பொதி-2021
வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய இயலா நிலையிலுள்ள அங்கத்தவர்களுக்கும் நலிவுற்ற குடும்ப வாழ்வாதாரத்தினைக் கொண்ட குடும்பங்களுக்கும் இத்திட்டத்தினூடாக உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாதம்அங்கத்தவர்களின்
எண்ணிக்கையும்
பொதியும்
பெறுமதி
ஜனவரி101303,000.00
பெப்ரவரி77231,000.00
மார்ச்52156,000.00
ஏப்ரல்42126,000.00
மே47141,000.00
யூன்200600,000.00
யூலை163489,000.00
ஆகஸ்ட்1751,000.00
செப்ரெம்பர்106318,000.00
ஒக்டோபர்162486,000.00
நவம்பர்143429,000.00
டிசெம்பர்75225,000.00

இவ்வாண்டு 3555000 ரூபா பெறுமதியான 1185 உலர்உணவுப் பொதிகள் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.


மருத்துவ உதவிகள்-2021

கருவி நிறுவனம் மருத்துவ பராமரிப்பு மற்றும் தேவைகளுள்ள அங்கத்தவர்களின் கோரிக்கைக் கடிதங்களுக்கு அமைவாக அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ உதவிகளினை வழங்கி வருகின்றது. இந்த வகையில் இவ்வாண்டு இரு அங்கத்தவர்களின் மருத்துவ பராமரிப்பு மற்றும் செலவீனங்களுக்காக ரூபா 100,000.00 பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


நிகழ்வுகள்-2021

இவ்வாண்டுக்கான யூன் 12 ஆம் திகதி நடைபெறுகின்ற ஆண்டு விழா மற்றும் டிசெம்பர்-03 ஆம் திகதி நடைபெறுகின்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு என்பன கோவிட் பெருந்தொற்று நிலமை காரணமாக இவ்வாண்டு இடம் பெறவில்லை. ஒளிவிழா நிகழ்வு டிசெம்பர் 10ஆம் திகதி அன்று மட்டுப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களுடன் நினைவு கூறப்பட்டது.

உற்பத்திகள்-2021
கருவி நிறுவனம் கருவி சைன் திரவ சலவை சவர்க்காரம் (Shine), கருவி கைழுவி(Hand Wash), துணிப்பைகள் என்பனவற்றை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. இவ்வருடம் பெருந்தொற்றுக் காலத்திலும் எமது உற்பத்திகள் தடையின்றி நடைபெற்று வந்துள்ளது. மேலும் கருவி இவ்வாண்டு புதிய உற்பத்திகளான கருவி பாத்திரம் கழுவி(Dish Wash),கால்மிதி போன்றவற்றினையும் அறிமுகப்படுத்தியிருந்தது.

வலுச் சஞ்சிகை-2021
கருவி நிறுவனத்தின் வெளியீடான வலுச்சஞ்சிகை இவ்வாண்டும் வெளிவந்துள்ளது.

எமது நன்றிகள்
உலகப் பெருந் தொற்று இடர் காலத்திலும் கருவி நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் வழங்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பான நன்றிகளினை உரித்தாக்குகின்றோம்.

Previous Post மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கட்டுரைகள்
மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2022
Next Post மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2022