Karuvi -Jaffna

karuvi.org

உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members

உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members

கனடாவில் அமைந்துள்ள சாயி இல்லம் நல்லூர் சாயி இல்லத்தின் ஊடாக பிரதி ஞாயிற்றுக்கிழைமை தோறும் அங்கத்தவர்களுக்கான மதியபோசனத்தை வழங்கி வருகின்றது. தற்போது அனைத்து நாட்களிலும் அங்கத்தவர்களுக்கான மதிய போசன வசதியினை ஏற்படுத்தும் முகமாக சமயலாளருக்கான மாதாந்த வேதனத்தினையும் வழங்க முன்வந்துள்ளது.

அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்

நலச்சேவை இணைப்பாளர் திரு.கி.ஐங்கரன் அவர்கள் லண்டனில் வதியும் தாயக உறவுகளின் நிதிப்பங்களிப்பை கருவி சமூக வள நிலையத்திற்கு பெற்று தந்தமைக்கு அமைவாக கடந்த 03.01.2015 அன்று 07 பயனாளிகளுக்கு ரூபா 30,000 என்ற அடிப்படையில் கடனுதவிகளும், தூள் திரித்து வியாபாரம் செய்யும் பயனாளி ஒருவருக்கான மூலப்பொருட்களும், கருவாடு வியாபாரம் செய்யும் பயனாளி ஒருவருக்கான விற்பனைக்கான கருவாடும், பாக்குச்சீவல் வியாபாரத்தில் ஈடுபடும் பயனாளி ஒருவருக்கு பாக்கு மற்றும் பாக்குவெடடி என்பனவும் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு ஒலிப்பதிவு கருவி, பேசும் அகராதி, பாதணிகள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

30.01.2015 அன்று கால் பாதிப்புற்ற பயனாளி ஒருவருக்கான லுமாலா துவிச்சக்கரவண்டி, கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பயனாளி ஒருவருக்கான கோழிகள், கண்பார்வை பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவருக்கு எள்ளுப்பாகு உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் மற்றும் 20 அங்கத்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

  • 28.02.2015 அன்று 15 அங்கத்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
  • 14.03.2015 அன்று 30 அங்கத்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
  • 10.05.2015 அன்று கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்த கால் பாதிப்புற்ற பயனாளி ஒருவருக்கு கண் வில்லை ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர்சனசமூக நிலையத்தின் ஊடாக பெற்று வழங்கப்பட்டது.
  • 12.06.2015 அன்று ஆண்டு விழாவின் போது மாணவி ஒருவருக்கு பாத சத்திர சிகிச்சைக்காக ரூப 35,000 உம் இரண்டு பயனாளிகளுக்கு 48,000 பெறுமதியான கால்நமைகளும் வழங்கப்பட்டது.
  • 13.03.2015 அன்று 30 அங்கத்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
  • 20.06.2015 அன்று வர்த்தகத்தில் சிறுவியாபாரம் செய்யும் பயனாளி ஒருவருக்கு ரூபா 35,000 பெறுமதியான வண்டில் ராமகிருஷ்ணமிஷன்சுவாமி றிக்மஜானந்தாஜீ அவர்களும் மற்றும் கருவியின் நலன் விரும்பிகளாலும் வழங்கப்பட்டது.

 

  • Every Sunday to the members of the Karuvi sai illam Canada giving lunch through the nallur sai illam. Now they decide that they are ready to fund to the cook to preparing meals to all days for the members.
  • Livelihood assistance to the members,

 

  1. Our welfare coordinator Mr.K.Iynkaran got the donation from the motherland well-wishers who are live in UK to our organization. From that donation, We gave loan for 07 members according to Rs 30,000 , Raw materials to chillipowder for a member, Some amount of dry fish for a member who is the seller of dry fish, Areconuts and areconut cutter to a member who is a areconut seller and A recorder, speaking dictionary and shoes to a student on 03.01.2015.
  2. On 30.01.2015 we gave a bicycle to a member who is lost her legs, some hens for a member, Raw materials of elluppagu for a member who is a blind and packets of grocery items for 20 members.
  3. On 28.02.2015 we gave 15 packets of grocery items for 15 members.
  4. On 14.03.2015 we gave 15 packets of grocery items for 15 members.
  5. On 10.05.2015 our organization got a lense from Sri Atputhanarththna Vinayagar Communitee Centre and gave it to a member for eye surgery.
  6. On our annual day we gave Rs 35,000 to a student for a surgery in leg and for two members we gave cow and goat at the cost of Rs 48,000.
  7. On 13.06.2015 we gave 10 packets of grocery items for 10 members.
  8. We gave a cart for a member by Karuvi well-wishers and Colombo Ramakrishna mission Swami Rikmayananthaji.

 

Image (2) Image (3) Image (4) Image (5) Image (6) Image (7) Image (8) Image (9) Image (10) Image (11) Image (12) Image (13) Image (14) Image (15) Image
Lunch-1

Lunch-2

Lunch-3

ஆண்டு நிறைவு விழா 2015 : ANNUAL DAY 2015
Previous Post ஆண்டு நிறைவு விழா 2015 : ANNUAL DAY 2015
யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program
Next Post யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program