மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்குடனும், மாற்றுத்திறனாளிகளை சமூக வருத்தியின் ஆரோக்கியமான பங்காளர்களாக மாற்றுவதன் மூலம் நிலையான சமூக அபிவிருத்தியைச் சாத்தியமாக்கும் நோக்குடனும் கருவி நிறுவனம் ஆகஸ்ட்-16 தொடக்கம் ஒக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் கொடித்திங்களாகப் பிரகடனப்படுத்தி இவ்விழிப்பூட்டல் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தது. இச்செயற்பாட்டின் வெற்றிக்கு பங்களித்த மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறவனப் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. இச்செயற்றிட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட நிதி வலுவிழந்தவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவிகரமாய் அமைந்துள்ளது.
கொடித்திங்கள்-2018


Previous Post
காட்சிக்கூடம்-2018

Next Post
அணுகு வசதிப்படுத்தல் 2019