கருவி நிறுவனம் வலுவிழந்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பொருத்தமான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் மே 02, மே 05, யூலை 28 ஆகிய திகதிகளில் பயனாளிகள் மூவருக்கு கால்நடைகள் வழங்கி வைக்கப்பட்டன. யூலை 15இல் பயனாளி ஒருவருக்கு கடையில் வியாபாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. யூலை 19இல் இசை வகுப்புக்களை நடாத்தும் பயனாளி ஒருவருக்கு ஓகன் இசைக் கருவி வழங்கி வைக்கப்பட்டது. இரண்டு பயனாளிகளுக்கு சுயதொழில் அபிவிருத்திக் கடன் திட்டத்தினூடாக கடனுதவி வழங்கப்பட்டது.
இவ்வுதவித்திட்டங்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

