கருவி நிறுவனம் அங்கத்தவர்களிடையே மறைந்துள்ள கலைத்திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அங்கத்தவர்களின் முழுமையான பங்களிப்புடன் இராகஸ்ருதி இசைக்குழு, பட்டிமன்றக்குழு, நாடகக்குழு போன்ற குழுக்களை அமைத்து சமூகத்தில் ஆற்றுகைகளை நடாத்தி வருகின்றது. ஆலயம் மற்றும் பொது நிகழ்வுகளின் போதும், தொலைக்காட்சி நிகழ்வுகளின் போதும் இவ்வாற்றுகைகள் இடம் பெறுகின்றன.
ஆகஸ்ட் 5 இல் அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலய மகோட்சவத்தின் போது இராகஸ்ருதி இசைக்குழுவின் இசையாற்கை, ஆகஸ்ட் 20 இல் புத்தூர் மஞ்சவுனா ஞான பைரவர் ஆலய மகோட்டவத்தின் போது பட்டிமன்ற ஆற்றுகை என்பன இடம் பெற்றன.
