கருவி உற்பத்தி சந்தைப்படுத்தல் அலகினால்; கருவி சைன் (Karuvi Shine) எனும் பெயரில் திரவ சலவை சவர்க்காரமும், கருவி கைகழுவியும் (Karuvi Hand wash), கருவி சூழல்நேய அலகினால் துணிப்பை என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்தும் நோக்குடனும் கருவியின் சமூகப்பணிகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் நாட்டின் பல பகுதிகளில் இடம் பெறும் பொது நிழ்வுகளின் போது கருவி நிறுவனம் காட்சிக்கூடங்களினை அமைத்திருந்தது. ஆகஸ்ட் மாத நல்லூர் மகோட்சவம்;, ஆகஸ்ட் 10,11,12,13, 14, 15 இல் திருமுருகண்டி பிள்ளையார் ஆலயம், செப்ரெம்பர் 6,7,8,9 இல் யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சி, செப்ரெம்பர் 14, 15 இல் யா.மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி, செப்ரெம்பர் 29,30 மற்றும் ஒக்டேபர் 1 இல் இல.15, றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக்கூடத்தில் இடம்பெற்ற ஓவிய கண்காட்சி, நவம்பர் 5இல் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சி போன்றவற்றில் நிறுவப்பட்ட எமது நிறுவன காட்சிக்கூடத்தினூடாக பொது மக்கள் மத்தியில் எமது நிறுவனம் தொடர்பாகவும், கருவி உற்பத்திகள் தொடர்பாகவும் பல விடயங்களைத் தெரியப்படுத்த முடிந்தது.
காட்சிக்கூடம்-2019


Previous Post
ஆற்றுகைகள்-2019

Next Post
காணிக்கொள்வனவு